தற்கால மனிதர்களின் பூர்வீகம் பொட்ஸ்வானாவில் கண்டுபிடிப்பு

தற்கால மனிதனின் தோற்றத்தின் தடயங்களை வடக்கு பொட்ஸ்வானா பிராந்தியத்தின் சம்பசி நதியின் தெற்காக கண்டுபிடித்ததாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது உப்பு நிலையாக இருக்கும் இந்தப் பகுதி 200,00 ஆண்டுகளுக்கு முன் தற்கால மனிதர்களான ஹோமோ சேப்பியன்களின் இருப்பிடமாக இருந்துள்ளது.

இந்த தற்கால மனிதர்கள் சுமார் 70,000 ஆண்டுகள் இந்தப் பகுதியில் வசித்திருப்பதாக சயன்டிபிக் ஜெர்னல் நேச்சர் சஞ்சிகையில் வெளியாகிய ஆய்வு அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 130,000 ஆண்டுகளுக்கு முன்னர் பிராந்தியத்தில் ஏற்பட்ட காலநிலை மாற்றம் அந்தக் குழுவை முதலில் வட கிழக்காகவும் பின்னர் தென்மேற்காகவும் புலம்பெயரச் செய்தது.

“சுமார் 200,000 ஆண்டுகளுக்கு முன்னர் தற்கால மனிதனின் பூர்வீகம் ஆபிரிக்கா என்பது மிக நீண்ட காலமாக எமக்குத் தெரியும்” என்று மருத்துவ ஆய்வுக்கான கார்வான் நிறுவனத்தின் வனெஸ்ஸா ஹேய்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

“ஆனால் இந்த ஆய்வு வரை அதன் தாயகம் எங்கே என்பது சரியாக தெரியாமல் இருந்தது” என்றார்.

ஆய்வில் அடையாளம் காணப்பட்டிருக்கும் மக்கடிக்காடி ஒக்கவாங்கோ என்ற பகுதி தற்கால விக்டோரியா ஏரியை விடவும் சுமார் இரு மடங்கு பெரிய ஏரி கொண்ட பிரதேசமாக இருந்துள்ளது.

தென்னாப்பிரிக்கா மற்றும் நமீபியாவில் வசிக்கும் கோசேன் எனப்படும் பழங்குடிகளின் மரபணு மாதிரிகளைச் சேகரித்த ஆராய்ச்சியாளர்கள் அந்த மரபணு மாதிரிகளுடன் வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு இடங்களில் சேகரிக்கப்பட்ட மரபணு மாதிரிகளை ஒப்பிட்டுப் பார்த்தனர்.

இயற்கைச் சீற்றங்கள், பருவநிலை மாற்றங்கள் ஏற்படும் ஒவ்வொரு முறையும் மனிதார்களின் மரபணுவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை அவர்கள் கண்டறிந்தனர்.

ஆய்வின் முடிவில், வரலாற்றுக்கு முந்தைய மனிதர்கள் சுமார் 70 ஆயிரம் ஆண்டுகள் பொட்ஸ்வானாவில் வசித்தனர் என்றும், அதன்பின்னர் அவார்கள் வெவ்வேறு இடங்களுக்குப் புலம் பெயார்ந்தனர் என்றும் முடிவு செய்தனர்.

Wed, 10/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை