ஸ்பெயினின் கட்டலான் பிரிவினை தலைவர்களுக்கு சிறை தண்டனை

ஸ்பெயின் கட்டலான் பிராந்தியத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற சுதந்திரத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பில் துரோகம் இழைத்ததாக அந்தப் பிராந்தியத்தில் ஒன்பது பிரிவினைவாத தலைவர்களுக்கு ஒன்பது தொடப்பம் 13 ஆண்டுகள் வரையான சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின் உச்ச நீதிமன்றத்தில் நேற்று அளிக்கப்பட்ட இந்தத் தீர்ப்பில், சட்டத்திற்கு கட்டுப்படாததாக குற்றங்காணப்பட்ட மேலும் மூவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

குறித்த 12 அரசியல்வாதிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் அனைவரும் தம் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளனர்.

இந்தத் தீர்ப்பை ஒட்டி கடலோனிய பிராந்தியத்தில் பிரிவினைவாதிகள் பாரிய மக்கள் ஒத்திழையாமை போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்த வழக்கு விசாரணைக்கு முகம்கொடுத்த உயர் நிலை சுதந்திர ஆதரவு தலைவரான முன்னாள் கட்டலோனிய துணைத் தலைவர் ஒரியோல் ஜங்குவேராஸுக்கு அதிகபட்சம் 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பை அடுத்து கட்டலான் சுதந்திர ஆதரவாளர்கள் அந்தப் பிராந்திய தலைநகர் பார்சிலோனாவில் “அரசியல் கைதிகளை விடுதலை செய்” என்று எழுதப்பட்ட பதாகைகளுடன் பேரணி நடத்தினர்.

இந்த நகரில் வார இறுதியில் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணி நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

ஸ்பெயின் அரசியலமைப்பு நீதிமன்றம் சட்டவிரோதமென அறிவித்த சர்வஜன வாக்கெடுப்புக்கு ஆதரவாக கட்டலோனியாவில் சுதந்திரத்திற்கு ஆதரவான தலைவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

2017 இல் வாக்கெடுப்பை தடை செய்து மூன்று வாரங்களில் கட்டலான் பாராளுமன்றம் சுதந்திரப் பிரகடனம் ஒன்றை வெளியிட்டது. இதனை அடுத்து அந்தப் பிராந்தியத்தை ஸ்பெயின் மத்திய அரசு தனது நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததை அடுத்து பல தலைவர்களும் தப்பிச் சென்றனர் அல்லது கைது செய்யப்பட்டனர்.

7.5 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஸ்பெயினின் செல்வந்த பிராந்தியமான கட்டலோனியா தமக்கு சொந்தமான மொழி, பாராளுமன்றம், கொடி மற்றும் தேசிய கீதத்தை கொண்டுள்ளது.

Tue, 10/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை