தாய்லாந்தில் 6 யானைகள் அருவியில் விழுந்து பலி

தாய்லந்தின் காவ் யாய் தேசிய பூங்காவில் அருவியிலிருந்து விழுந்த 6 யானைகள் உயிரிழந்தன. மடிந்த யானைகளுடன் விழுந்த மற்ற இரு யானைகள் பின்னர் வெற்றிகரமாக மீட்கப்பட்டன. தப்பித்த இரு யானைகள் மற்ற யானைகளுக்கு உதவ முயன்றதில் பாறை ஒன்றில் சிக்கிக்கொண்டன. சம்பவத்தைத் தொடர்ந்து அருவி மூடப்பட்டுள்ளதாகப் பூங்காவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அதிகாலை 3 மணியளவில் யானைகள் கூச்சலிடும் சத்தத்தை பூங்கா அதிகாரிகள் கேட்டனர். மீட்புப் பணியின்போது யானைகளுக்கு ஊட்டசத்து மாத்திரைகள் கலக்கப்பட்ட உணவுகள் கொடுக்கப்பட்டன. யானைகளின் பலத்தை அதிகரித்தால் அவை பாறையைச் சொந்தமாக ஏறிவிடும் என்பது அவர்களின் நம்பிக்கை.

யானைகள் எப்படி விழுந்தன என்பது முழுமையாகத் தெரியவில்லை. ஆனால் சம்பவம் நடந்த நாளுக்கு முன், இரவில் மழை பெய்ந்தாகத் தெரிவிக்கப்பட்டது. சுமார் 2,000 சதுரமீற்றர் பரப்பளவு கொண்ட பூங்காவில் 300 யானைகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனவிலங்கு பூங்கா சுற்றுப்பயணிகளிடையே பிரபலாமாக இருந்து வருகிறது. 1992ஆம் ஆண்டில் எட்டு யானைகள் விழுந்து உயிரிழந்தது தாய்லாந்தில் தேசிய அளவில் கவனத்தைப் பெற்றது.

Mon, 10/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை