வெளிநாட்டு ஜோடிகள் ஒன்றாக தங்குவதற்கு சவூதியில் அனுமதி

சவூதி அரேபியாவில் வெளிநாட்டு ஆண்களும் பெண்களும் இணைந்து இனி ஹோட்டல் அறைகளை வாடகைக்கு எடுத்துத் தங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருவருக்கும் உள்ள உறவுமுறையைக் குறிப்பிட இனி அவசியம் இல்லை.

சவூதி அரேபியா புதிய சுற்றுப்பயண விசா விதிமுறையை அறிமுகப்படுத்திய பின்னர் அந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உள்நாட்டுப் பெண்களும் இனி ஹோட்டல் அறைகளை வாடகைக்கு எடுக்க முடியும். இதற்கு முன்னர் அவ்வாறு செய்ய அனுமதி இல்லை.

புதிய மாற்றத்தின்மூலம், தனியாகச் செல்லும் பெண்கள் இன்னும் எளிதாகப் பயணம் புரியலாம். திருமணமாகாத வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளும் ஒன்றாகத் தங்க புதிய மாற்றம் வழிவகுக்கும். ஹோட்டலில் தங்கச் செல்லும்போது, சவூதி குடிமக்கள் தங்களின் குடும்ப அடையாளத்தைக் காட்ட வேண்டும். வெளிநாட்டினருக்கு அது தேவையில்லை.

சவூதியின் புதிய விசா நடைமுறைகளின்படி பெண் சுற்றுலா பயணிகள் தம்்மை முழுமையாக மூடத் தேவையில்லை.

ஆனால் அடக்கமான ஆடைகளை அணிவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. மதுபானத்திற்கு தொடர்ந்து தடை நீடித்து வருகிறது.

வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் மற்றும் முதலீட்டாளர்களை கவரும் முயற்சியாகவே சவூதி தனது கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது.

Mon, 10/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை