யெமன் போரினால் 5,000 குழந்தைகள் உயிரிழப்பு

யெமனில் இடம்பெற்று வரும் உள்நாட்டுப் போரில் 5,000க்கும் அதிகமான குழந்தைகள் பலியாகி இருக்கலாம் என்று யுனிசெப் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து யுனிசெப் கூறும்போது, யெமனில் நடக்கும் உள்நாட்டுப் போருக்கு 5,000 குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது காயமடைந்திருக்கலாம். மேலும் இலட்சக்கணக்கான குழந்தைகள் தங்களது கல்வியைக் கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

யெமனில் 20 இலட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 3 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் ஐந்து வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் யுனிசெப் அண்மையில் அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

யெமன் அரசுக்கு ஹூத்திக் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் கடந்த 2015 தொடக்கம் மோதல் நீடித்து வருவதோடு சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணி, அரசுக்கு ஆதரவாக அங்கு தாக்குதல்களை நடத்தி வருகிறது.

Fri, 10/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை