தாய்லாந்து மன்னரால் ஆறு அதிகாரிகள் அதிரடி நீக்கம்

மிகவும் மோசமாக நடந்து கொண்டதாக ஆறு அதிகாரிகளை தாய்லாந்து மன்னர் வஜ்ரலாங்கோர்ன் பதவி நீக்கியுள்ளார்.

மன்னருக்கு எதிராகவும், விசுவாசமின்றியும் செயல்பட்டதாக கூறி, மன்னரின் துணைவியாக இருந்த பெண் தளபதி சின்னிநாட் வாங்வாச்சீர்னாபாக்–கின் அரச அதிகாரத்தை பறித்த சில நாட்களில் இந்த நடவடிக்கை வந்துள்ளது.

ஒரு பெண், ஒரு மூத்த பாதுகாப்பு அதிகாரி மற்றும் இரண்டு அரச மெய்காப்பாளர்கள் இந்த ஆறு பேரில் அடங்குகின்றனர்.

தங்களின் நலன்களுக்காக அல்லது பிறரின் ஆதாயத்திற்காக தங்களின் அதிகாரங்களை பயன்படுத்திக் கொண்டதாக இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை பெண் தளபதி சின்னிநாட் வாங்வாச்சீர்னாபாக் –கின் அரச அதிகாரத்தை பறித்து வஜ்ரலாங்கோர்ன் உத்தரவிட்டிருந்தார்.

மன்னர் வஜ்ரலாங்கோர்ன் தனது தந்தையை விடவும் அதிகாரங்களை நேரடியாக பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

தாய்லாந்தில் அரச குடும்பத்தை விமர்சிப்பது சட்டத்தில் தடுக்கப்பட்டிருப்பதோடு அதற்கு எதிராக கடும் சிறைத் தண்டனைகள் விதிக்கப்படுகின்றன.

Fri, 10/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை