பெருவில் பஸ் பள்ளத்தில் வீழ்ந்து 23 பேர் உயிரிழப்பு

பெரு நாட்டின் மலைப்பாங்கான குஸ்கோ பிராந்தியத்தில் பயணிகள் பஸ் வண்டி ஒன்று பள்ளத்தில் விழுந்து குறைந்தது 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட இந்த விபத்தில் பஸ் வண்டி வீதியை விட்டு விலகி 100 மீற்றர் பள்ளத்தில் விழுந்துள்ளது. 48 பயணிகளுடன் அமேசன் மழைக்காட்டை ஒட்டி இருக்கும் பூர்டோ மோல்டோனாடோ நகரில் இருந்து மலைப்பிரதேசமான குஸ்கோவை நோக்கி இந்த பஸ் பயணித்துள்ளது.

“உயிரிழந்தவர்களின் உடல்கள் சிதைந்த பஸ் வண்டிக்குள் சிக்கியுள்ளன” என்று அல்வாரோ மென்டோசா என்ற பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார். “கடும் மழை பெய்யும் நிலையில் அந்த உடல்களை வெளியே கொண்டுவருவது கடினமாக உள்ளது” என்றும் அவர் கூறினார்.

வேகமான ஓட்டம், மோசமான வீதிகள், போதிய சமிக்ஞை கம்பங்கள் இன்மை மற்றும் குறைவான பொலிஸ் கண்காணிப்பு நிலவுவதால் பெருவில் வீதி விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன.

கடந்த ஜூலையிலும் பஸ் வண்டி ஒன்று மலையில் இருந்து சரிந்து 19 பேர் உயிரிழந்தனர்.

Fri, 10/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை