Header Ads

தென்கொரியாவை தாக்கிய சூறாவளியால் 6 பேர் பலி

தென் கொரியா நாட்டில் மிடாக் சூறாவளி கோரத்தாண்டவமாடியதில், 6 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

அந்நாட்டின் தென் பகுதியை கடந்த வாரம் மிடாக் சூறாவளி தாக்கியது. அதன் தொடர்ச்சியாக அவ்வப்போது சூறாவளி காற்றுடன் பலத்த மழையும் பெய்து வந்ததால், நீர்நிலைகள் நிரம்பி பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இடைவிடாது பெய்த மழை காரணமாக சுமார் 100 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதனால் வீடுகளை இழந்து தத்தளித்து வரும் பொதுமக்கள், பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த இரு தினங்களாக தேங்கி நிற்கும் மழை நீரை காரணம் காட்டி அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மிடாக் சூறாவளியில் சிக்கி இதுவரை 6 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 4 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

தற்போது மிடாக் சூறாவளி வலுவிழந்தாலும், தென்கிழக்கு பகுதிகளில் வீடுகளை இழந்த சுமார் 44,045 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Fri, 10/04/2019 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.