2018, 2019 ஆண்டுகளுக்கான இலக்கிய நோபல் பரிசு அறிவிப்பு

2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு பெண் எழுத்தாளர் உள்பட இரண்டு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் பாலியல் புகார் காரணமாக கடந்த ஆண்டில் விடுபட்ட இலக்கியத்துக்கான நோபல் பரிசு நடப்பாண்டுடன் சேர்த்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 2019ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு ஆஸ்திரிய நாட்டை சேர்ந்த பீட்டர் ஹேன்ட்கேவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டுக்கான இலக்கியதுக்கான நோபல் பரிசு போலந்து நாட்டைச் சேர்ந்த ஓல்கா டோகார்சுக்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இலக்கியதுக்கான நோபல் பரிசு பெறும் நபரை தேர்ந்தெடுத்து பரிந்துரைக்கும் பணியை ஸ்வீடன் இலக்கிய அகடமி மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டில் இந்த அகடமியின் உறுப்பினர் ஒருவரது கணவர் மீது எழுந்த பாலியல் குற்றச்சாட்டு பூதாகரமானது.

அத்துடன் நோபல் தேர்வு குழுவின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து விட்டதால், 2018ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு 2019ஆம் ஆண்டுடன் சேர்த்து வழங்கப்படும் என நோபல் அறக்கட்டளை அறிக்கை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

Fri, 10/11/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக