பங்களாதேஷ் மாணவன் நான்கு மணி நேரம் அடித்துக் கொலை

பங்களாதேஷில் அரசாங்கத்தைக் குறைகூறும் கருத்துகளை இணையத்தில் வெளியிட்ட கல்லூரி மாணவர் ஒருவர் விடுதியில் அடித்துக் கொல்லப்பட்டதாகச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

அப்ரார் பஹத் என்னும் அந்த 21 வயது மாணவர் இந்தியாவுடனான தண்ணீர்ப் பகிர்வு உடன்பாடு குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் விமர்சித்து இணையத்தில் எழுதியிருந்தார்.

அதன் காரணமாக அவர் ஆளும் அவாமி லீக் கட்சியின் இளைஞர் பிரிவைச் சேர்ந்தவர்களால் கொல்லப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

டாக்காவிலுள்ள பங்களாதேஷ் பொறியியல் கல்லுௗரியில் பயின்றுவந்த அவர், உயிரிழப்பதற்கு சுமார் நான்கு மணி நேரம் முன்னர் வரை பலவிதங்களில் தாக்கப்பட்டிருப்பதாக பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

பஹத் கடுமையான தாக்குதலால் உயிரிழந்த தகவலை, டாக்கா பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். மாணவர் விடுதியிலுள்ள கண்காணிப்புக் கெமராவில், பஹதின் உடலைச் சிலர் தூக்கி வருவது பதிவாகியுள்ளது.

அந்தக் கொலை தொடர்பில், இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஆறு சந்தேக நபர்களைக் பொலிஸார் தேடிவருகின்றனர்.

பஹத் மரணம் குறித்து விசாரணை நடத்தியதாகக் கூறியுள்ள அவாமி லீக் கட்சியின் இளைஞர் பிரிவு, 11 உறுப்பினர்களைக் கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாகத் தெரிவித்தது.

அந்தப் பிரிவு மாணவர்களைத் துன்புறுத்துவதாகவும் அவர்களை மிரட்டிப் பணம் பறிப்பதாகவும் பரவலாகக் குறைகூறப்பட்டு வருகிறது.

Fri, 10/11/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக