புர்கினா பாசோ பள்ளிவாசல் தாக்குதலில் 16 பேர் பலி

புர்கினா பாசோவின் வடக்கில் பள்ளிவாசல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டு மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சல்மோசி என்ற கிராமத்தில் உள்ள பெரிய பள்ளிவாசலுக்குள் கடந்த வெள்ளிக்கிழமை மாலை தொழுகையின்போது துப்பாக்கிதாரிகள் உள்ளே நுழைந்து கண்டபடி சூடு நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலை அடுத்து மாலி நாட்டு எல்லையில் இருக்கும் அந்த கிராமத்தில் இருந்து மக்கள் வெளியேற ஆரம்பித்துள்ளனர். எனினும் இந்த தாக்குதலுக்கு எந்தத் தரப்பும் பொறுப்பேற்கவில்லை.

ஜிஹாதிக் குழுக்களுடனான மோதல்களில் கடந்த ஒருசில ஆண்டுகளில் அந்நாட்டில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 2015 ஆம் ஆண்டு தொடக்கம் புர்கினா பாசோவில் ஜிஹாதிக்களின் தாக்குதல்கள் அதிகரித்திருப்பதோடு ஆயிரக்கணக்கான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

Mon, 10/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை