மூவருக்கு பொருளாதாரத்திற்கான நோபல்

இந்தாண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்தியர் உள்ளிட்ட மூன்று பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க வாழ் இந்தியரான அபிஜித் பனர்ஜி, அமெரிக்க வாழ் பிரெஞ்சுக்காரரான அவரது மனைவி எஸ்தர் டுப்லோ, அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் மைக்கல் கிரம்மர் ஆகியோருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களின், சர்வதேச வறுமையை ஒழிப்பதற்கான சோதனை அணுகுமுறைக்காக இந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அபிஜித் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் 1981ஆம் ஆண்டு அறிவியல் பட்டப்படிப்பு முடித்தார். அதன்பின் 1983ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுகலை படித்தார்.

Tue, 10/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை