கண்ணிவெடி அகற்ற ஜப்பானிடமிருந்து 105 மில். நிதி

முகமாலை பகுதியில் யுத்த காலத்தில் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளில் ஸாப் நிறுவனமும், ஹலோரெஸ்ட் நிறுவனமும் இணைந்து செயற்பட்டு வருகின்றன.

இவ் இரண்டு நிறுவனங்களுக்கும் ஜப்பானிய அரசாங்கத்தின் கிராஸ்ரூட்ஸ் மனித பாதுகாப்பு திட்டங்களுக்கான கிராண்ட் உதவி (GRANT ASSISTANCE FOR GRASSROOTS HUMAN SECURITY PROJECTS) திட்டததின்னுடாக  கண்ணிவெடிகளை அகற்றும் பணிக்காக ஒரு  வருடத்துக்கான சுமார் 105 மில்லியன் ரூபா நிதி வழங்க ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. ஒப்பந்தத்தில் ஸாப் நிறுவனத்தினதும் ஹலோரெஸ்ட் நிறுவனத்தினதும் முகாமையாளர்கள் நேற்று கையெழுத்திட்டு ஜப்பானிய தூதுவரிடம் இருந்து பெற்றுக்கொண்டனர். இதன் பின்னர் கண்ணிவெடி  அகற்றப்படும்  இடங்களுக்கு நேரில் சென்று ஜப்பானிய தூதுவர் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது

கிளிநொச்சி குறூப் நிருபர்

Sat, 10/19/2019 - 11:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை