SLT Speedup சைக்கிள் சவாரி: பெண்களுக்கான போட்டி நேற்று ஆரம்பம்

SLT Speedup சைக்கிள் சவாரி போட்டியின் ஒரு அங்கமாக நேற்று கொழும்பு SLT தலைமையகத்திற்கு முன்பாக ஆரம்பமான சைக்கிள் போட்டியை SLT குழும பணிப்பாளர் பி.ஜி குமாரசிங்க கொடியசைத்து ஆரம்பித்து வைப்பதையும் போட்டியாளர்களையும் காணலாம்.

பெண்களுக்கான போட்டி இரண்டு நாட்கள் கொண்ட போட்டியாகும், இது நேற்று 27ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமாகி குருநாகல் வழியாகச் சென்று இன்று 28ஆம் திகதி சனிக்கிழமை தம்புள்ளையில் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.பெண்கள் போட்டியின் ஒட்டுமொத்த வெற்றியாளருக்கு.

250,000 ரூபாவும் வழங்கப்படவுள்ளது.சைக்கிள் பயணத்தில் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில் பாடசாலை மாணவர்களுக்கான முதல்தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சைக்கிள் ஓட்டப் போட்டி நிகழ்வு (ஒரு நாள்) இன்று 28ஆம் திகதி சனிக்கிழமை தம்புள்ளையில் ஆரம்பித்து கெக்கிராவ, ஹபரண வழியாக தம்புள்ளை வரை பயணிக்கும்.

Sat, 09/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை