கல்வித்துறைக்கு அரசு கூடிய நிதி ஒதுக்கீடுகளை செய்துள்ளது

ஹெக்டர் அப்புஹாமி எம்.பி

கல்வி நடவடிக்கைகளுக்கு இந்த அரசாங்கம் கூடிய நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் கல்வி துறையிலே ஏனைய அபிவிருத்தி அடைந்த நாடுகளை போல எமது நாடும் மாற்றம் அடையும் என புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஐ.தே.கட்சியின் புத்தளம் தொகுதி அமைப்பாளருமான ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்தார்.

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டடத்தினை பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்ததன் பின்னர் அங்கு நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வானது நேற்று (09) கல்லூரி அதிபர் ஐ.எல்.சிராஜுதீன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விலே புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.நவவி, புத்தளம் வலய கல்வி பணிப்பாளர் டபிள்யூ. பீ.எஸ்.ஏகே.விஜேசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

மக்களுக்கு சேவைகளை ஆற்றுவதற்கு, அவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு எமக்கு நல்ல சந்தர்ப்பங்கள் கிடைத்துள்ளன. அவைகளை நாம் சிறந்த முறையில் நிறைவேற்றி வருகின்றோம்.

இந்த பாடசாலை உருவாக்கத்துக்கு உதவிய நகர பிதா பாயிஸுக்கு நான் புகழாரம் சூடுகிறேன்.

புத்தளம் தினகரன், புத்தளம் தினகரன் விஷேட நிருபர்கள்

Tue, 09/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை