மட்டக்களப்பில் மாணவர்கள் மத்தியில் புத்தாக்க கண்காட்சி

கிழக்கு மாகாண பாடசாலை மாணவர்கள் மத்தியில் புதிய ஆக்கத்திறன்களை ஊக்குவிக்கும் நோக்குடன் மாகாண கல்வியமைச்சு சிறு கைத்தொழில் அபிவிருத்தி திணைக்களத்துடன் இணைந்து விசேட செயல் திட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் வருடந்தோறும் மாவட்ட அடிப்படையில் நடைபெறும் புத்தாக்கக் கண்காட்சிப்போட்டி இவ்வாண்டு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கல்வி வலயங்களுக்கிடையில் தற்போது நடாத்தப்படுகிறது.

மட்டக்களப்பு மத்தி, மட்டக்களப்பு, கல்குடா, பட்டிருப்பு மற்றும் மட்டக்களப்பு மேற்கு ஆகிய கல்வி வலயங்களில் ஐந்து பிரிவுகளாக போட்டி நடாத்தப்பட்டு மதிப்பீடுகள் மதிப்பீடு செய்யப்பட்டு மாவட்ட ரீதியில் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இக்காட்சி போட்டியினை மாகாண கல்வித் திணைக்களத்தின் உதவிக் கல்விப்பணிப்பாளர்களான எஸ். ஷஹீல், எஸ். ரவீந்திரநாதன், வீ. சௌந்தரராஜா மற்றும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி றிஸ்மியா பாணு உள்ளிட்டோர் மதிப்பீடு செய்தனர். மாணவர்கள் மத்தியில் புதிய ஆக்கத்திறன்களை ஊக்குவித்து கிராமிய மட்டத்தில் கைத்தொழில் துறையினை வளர்ப்பது இத்திட்டத்தின் ஒரு நோக்கமாகும்.

சுற்றாடலிலுள்ள கழிவுப்பொருட்களைப் பயன்படுத்தி பயன்தரும் அழகிய ஆக்கங்களைச் செய்வதற்கும் இத்திட்டத்தின் மூலம் ஊக்கமளிக்கப்படுகிறது.

(ஏறாவூர் குறூப் நிருபர்)

Tue, 09/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை