வடக்கு, கிழக்கு பிறிமியர் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் அரையிறுதி ஆட்டம்

தமிழர் உதைபந்தாட்டப் பேரவை நடாத்தும் வடக்கு, கிழக்கு பிறிமியர் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் பலப் பரீட்சையாக அமையப் போகின்ற அரை இறுதி ஆட்டம் சனிக்கிழமை (21) இரவு

7.00 மணிக்கு யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ளது.

முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் டில்கோ கோங்கரஸ் அணியும் தமிழ் யுனைட்டட் அணியும் மோதவுள்ளன. ஞாயிறு (22) நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் நொதன் எலைட் அணியும் வல்லவை உதைபந்தாட்ட அணியும் மோதவுள்ளன.

இதன் இறுதிப் போட்டி அடுத்த மாதம் 5 ஆம் திகதி இதே விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. இதில் அதிதிகளாக இலங்கை கிரிக்கட் அணியின் நட்சத்திரங்களாகப் பிரகாசித்த மஹேல ஜயவர்த்தன, குமார் சங்கக்காரவும் கலந்து கொள்ளவுள்ளனர்.

வடக்கு , கிழக்கு ஆகிய இரு மாகாணங்களில் 12 உதைபந்தாட்ட அணிகள் இந்தப் போட்டித் தொடரில் பங்குபற்றி இருந்தன.

ஐபிசி தமிழ் அனுசரணையோடு நடைபெறும் இந்த போட்டித் தொடருக்கான மொத்த பணப் பரிசுத்தொகை ஒரு கோடி ரூபாவாகும்.

சம்பியன் அணிக்கு 50 இலட்சம் ரூபாவும் இரண்டாம் இடத்தைப் பெறும் அணிக்கு 30 இலட்சம் ரூபாவும் 3 ஆம் இடத்தைப் பெறும் அணிக்கு 10 இலட்சம் ரூபாவும் 4 ஆம் இடம் பெறும் அணிக்கு 5 இலட்சம் ரூபாயும் பரிசாக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 திருகோணமலை குறூப் , கிண்ணியா மத்திய நிருபர்கள்

Fri, 09/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை