ஜின்னாஹ் ஷரிபுத்தீன் எழுதிய ''முக்காழி'' நாவல் அறிமுக விழா

சாய்ந்தமருது அபாபீல்கள் கவிதா வட்டத்தின் ஏற்பாட்டில் காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் எழுதிய ”முக்காழி” நாவல் நூல் அறிமுக விழா நேற்றுமுன்தினம் (14) சாய்ந்தமருது பேள்ஸ் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.

மர்ஹுமா திருமதி றைஹானா அபூசாலி அரங்கில் அம்பாறை மாவட்ட கலாசார அதிகார சபையின் பிரதித் தலைவர் ஏ.பீர்முகம்மது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மணிப்புலவர் மருதூர் ஏ மஜீது முன்னிலை அதிதியாகக் கலந்து கொண்டார்.

நூலின் முதல் பிரதியினை முபா பௌண்டேன் தவிசாளர் எம்.எம்.அப்துல் முபாறக் பெற்றுக் கொண்டார்.

இதன்போது இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறைத் தலைவர் பேராசிரியர் றமீஸ் அப்துல்லா, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியர் செ.யோகராசா,செங்கதிர் இதழாசிரியர் செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன், பாவேந்தல் பாலமுனை பாறுாக், ஆய்வாளர் ஜெஸ்மி எம்.மூசா ஆகியோர் நூல் தொடர்பான விமர்சனங்கள், ஆய்வுகள் மற்றும் கவி வாழ்த்துக்களை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் முன்னாள் தலைவர் எம்.ஐ.உதுமாலெப்பை உட்பட புத்துஜீவிகள், அதிபர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், கவிஞர்கள், ஊடகவியலாளர்கள், குடும்ப உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். மர்ஹுமா திருமதி றைஹானா அபூசாலியின் குடும்ப உறுப்பினர்களால் திருமதி ஜின்னாஹ் ஷரிபுத்தீனுக்கு இதன்போது நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்

Mon, 09/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை