திருகோணமலையில் முதலுதவி பற்றிய விழிப்பூட்டல் நிகழ்வு

உலக முதலுதவியாளர்கள் தினம் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் திருகோணமலைக் கிளையினரால் நேற்றுமுன்தினம் (14) சிறப்புற கொண்டாடப்பட்டது.

சிறைச்சாலையில் முதலுதவி பற்றிய விழிப்பூட்டல் நிகழ்வு சிறைச்சாலை அதிகாரியின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் உபதலைவர் திரு ரீ. சிவரட்ணராஜா , நிறைவேற்று அதிகாரி ​ெடாக்டர் என். ரவிச்சந்திரன், முதலுதவிப் போதனாசிரியர் திரு. செந்தூரன் ஆகியோருடன் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத் தொண்டர்களும் சிறைச்சாலை ஊழியர்களும், சிறைக் கைதிகளும் கலந்து கொண்டனர்.

இங்கு முதலுதவிப் போதனாசிரியர் செந்தூரன் மயக்கமடைந்த நோயாளி ஒருவருக்கு மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்கு முன் செய்யக்கூடிய முதலுதவி என்ன என்பது பற்றி விளக்கமளித்தார். இறுதியில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினரால் இரண்டு முதலுதவிப் பெட்டிகளும் நன்கொடையாக வழங்கப்பட்டன. அடுத்து மாணவர்களுக்கும் பொதுமக்களுக்குமான விழிப்புணர்வு நிகழ்வு கோட்டை வழி கடற்கரை வீதியில் ஒரு சாலை விபத்து நடைபெற்றால் அவ்விபத்தில் காயமடைந்தோரைக் காப்பாற்றி மருத்துவ மனைக்கு அனுப்பும்வரை செய்ய வேண்டிய முதலுதவிகளை 1990 அவசர நோயாளர் ஊர்தி ஆதரவுடன் செய்துகாட்டப்பட்டது. இந்நிகழ்வினை தமிழ் மொழியிலும், சிங்கள மொழியிலும் ​ெடாக்டர் ரவிச்சந்திரன் நெறிப்படுத்தினார்.

ரொட்டவெவ குறூப் நிருபர்

Mon, 09/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை