தெரிவுக் குழுவில் ஜனாதிபதி இன்று சாட்சி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சாட்சியமளிக்கவுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை 10மணிக்கு சாட்சியம் பெறப்பட இருப்பதாக தெரிவுக் குழு தலைவரும் பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் தெரிவுக்குழு உறுப்பினர்களை வரவழைத்து தான் சாட்சியமளிக்கத் தயாரென ஜனாதிபதி அறிவித்திருந்ததற்கமைய சாட்சியம் பதியப்பட இருக்கிறது.

தெரிவுக்குழுவின் கால எல்லையை இம்மாதம் இறுதி வரைக்கும் நீட்டித்துள்ள போதிலும் இத் திகதிக்குள் தெரிவுக்குழு அறிக்கையை முழுமைப்படுத்த முடியாத காரணத்தினால் தெரிவுக்குழு கால எல்லையை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கவும் தெரிவிக்குழு தீர்மானம் எடுத்தது.

அதற்கமைய சபாநாயகர் அனுமதியை கோரும் வகையில் அடுத்த பாராளுமன்ற அமர்வுகளின் போது யோசனை ஒன்றை முன்வைக்கவுள்ளதாகவும் தெரிவிக்குழு தலைவர் ஆனந்த குமாரசிறி தெரிவித்தார். இன்றைய சாட்சி விசாரணை ஊடகங்களுக்கு திறந்து விடப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. (பா)

ஷம்ஸ் பாஹிம்

Fri, 09/20/2019 - 08:54


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை