நாட்டில் நிரம்பி வழியும் பிரச்சினைகளுக்கு கோட்டா ஒருபோதும் தீர்வை வழங்கமாட்டார்

நாட்டு மக்கள் எதிர்காலம் தொடர்பில் பயத்துடனேயே வாழ்கின்றனர்

ஜனாதிபதித் தேர்தலில் பிரதான கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் நாட்டின் முக்கிய பிரச்சினைகளைக் கண்டுக்கொள்ள தவறியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்கள் எதிர்காலம் தொடர்பில் மிகுந்த பயத்துடனேயே வாழ்கின்றனர். மக்கள் மத்தியில் பிரச்சினைகள் நிரம்பி வழிகின்றன. அவற்றுக்கு கோட்டாபய ராஜபக்ஷ ஒருபோதும் தீர்வை வழங்கப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ரில்வின் சில்வா,

நாம் இன்று வாழ்வதற்கு உகந்த நாடொன்றில் வாழவில்லை.

நாட்டு மக்கள் எதிர்காலம் தொடர்பில் மிகுந்த பயத்துடனேயே வாழ்கின்றனர். ஐ.தே.கவுக்கு வாக்களிப்பதால் இந்த நிலைமை மாறப் போவதில்லை. கடந்த நான்கரை வருடங்களாக அக்கட்சி எதுவும் செய்திருந்தால் மீண்டும் அதிகாரத்தை கேட்டுப்பெற வேண்டிய அவசியம் இருக்காது.

அந்த கட்சியினர் மீண்டும் நாட்டை கட்டியெழுப்பும் முறை தொடர்பில் கதைப்பதில்லை. வேட்பாளர் குறித்தே தற்போது கவனம் செலுத்தி வருகின்றனர். நாட்டு மக்களின் பிரச்சினைகளை அடையாளம் கண்டு கொள்ளாதவர்கள் எவ்வாறு நாட்டை ஆட்சி செய்யப் போகின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். (ஸ)

Wed, 09/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை