சொலிஸிட்டர் ஜெனரல் தில்ருக்‌ஷி பதவியிலிருந்து இடைநிறுத்தம்

சொலிஸிட்டர் ஜெனரல் தில்ருக்‌ஷி டயஸ் விக்கிரமசிங்கவை அவரது பதவியில் இருந்து உடனடியாக இடைநிறுத்த பொதுச் சேவைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

சட்ட மாஅதிபர் திணைக்களத்தில் பணியாற்றிய இரண்டாவது சிரேஷ்ட நிலை அதிகாரியாக தில்ருக்ஷி பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.

தில்ருக்‌ஷி டயஸ் விக்ரமசிங்கவை அவரது பதவியில் இருந்து இடை நிறுத்தும் பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் தீர்மானம் சட்ட மாஅதிபருக்கு நேற்று தொலைபேசி மூலம் தெரிவிக்கப்பட்டதாகவும் நம்பகமாகத் தெரிய வருகிறது.

சொலிஸிட்டர் ஜெனரல் பதவியிலிருந்த இவர், அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடியிருந்தார். இவ்வுரையாடல் சர்ச்சைக்குள்ளானதையடுத்தே இவர் இடை நிறுத்தப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக பூர்வாங்க விசாரணை நடத்துமாறு சட்ட மாஅதிபர் தப்புல டி. லிவேரா பொதுச் சேவைகள் ஆணைக்குழுவிடம் கேட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Wed, 09/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை