மாத்தறை பகுதியில் கடும் மழை; மண்சரிவு அபாய எச்சரிக்ைக

கடும் மழை காரணமாக பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் மாலை 4.00 மணியளவில் (2019.09.01) தெனியாய இரத்தினபுரி வீதியில் புனித மத்தேயு பாடசாலை மைதானத்திற்கு அருகாமையில் ஏற்பட்ட மண்சரிவின் காரணமாக மூன்று வீடுகள் சிறுபாதிப்புக்குள்ளாகின.

இரத்தினபுரி வீதியில் தெனியாய தோட்டத்திற்குஅருகாமையில் சுமார் 75 மீற்றர் தூரத்திற்கு இடம் பெற்ற மண்சரிவின் காரணமாக கால்வாய் ஒன்று மூடப்பட்டதனால் மழைநீர் மூன்றுவீடுகளுக்கும் உட்புகுந்தன. இதனால் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை தெனியாய -- இரத்தினபுரி, தெனியாய - -அக்குரஸ்ஸ போன்ற வீதிகளின் பல இடங்களிலும் மண்சரிவுஅபாயம் நிலவுவதால் வாகன சாரதிகளை அவதானமாக செலுத்துமாறு பொலிஸார் வேண்டுக்கோள் விடுக்கின்றனர்.

இதேவேளை மூன்றாம் தவணைக்காக நேற்றையதினம் பாடசாலைகள் திறக்கப்பட்டன.

பெய்துவருகின்ற கடும் மழையின் காரணமாக மாணவர்களின் வருகை மிகவும் குறைவாகவே காணப்பட்டது.

தொழிலாளர்கள் வேலைக்கு செல்லும் எண்ணிக்கையும் கணிசமான அளவு குறைவடைந்துள்ளது.

தெனியாய தினகரன் நிருபர்

Tue, 09/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை