பாலைக்காட்டு ஹிஸ்புல்லாஹ் வித்தியாலயத்திற்கு குடிநீர் வசதி

ஓட்டமாவடி கோட்டத்திற்குட்பட்ட பாலைக்காட்டு வெட்டை ஹிஸ்புல்லாஹ் வித்தியாலய மாணவர்களின் நலன்கருதி ஓட்டமாவடி பிரதேச சபையானது நீர்த்தாங்கிகளை வழங்கி வைத்ததோடு, குடிநீர் விநியோகத்தையும் வழங்கி வைத்தனர்.

கோறளைப்பற்று- ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட பாலைக்காட்டு வெட்டை கிராமமானது நீர்வசதிகள் குறைந்த பிரதேசம் என்பதோடு மக்கள் குடிநீர் பாவனைக்கு நீண்டதூரம் சென்று தங்களது குடிநீர்த்தேவைகளை நிறைவு செய்து வருகின்றனர்.

இந்தப் பிரதேசத்திலுள்ள பாடசாலை மாணவர்கள் குடிநீர் இன்மையால் பாடசாலைக்கு சமூகமளிப்பதிலும் ஆர்வம் குறைந்தே காணப்பட்டனர். பிரதேச சபை உறுப்பினர் அஸீஸூர் ரஹீம்,பாடசாலை அதிபர் அஹமட் லெப்பை ஆகியோர் தவிசாளரிடம் வைத்த கோரிக்கைக்கு அமையவே முதற்கட்டமாக நீர்தாங்கிகள் மற்றும் நீர்விநியோக நடவடிக்கைகள் பெற்றுக்கொடுக்கப்பட்டன.

 (வாழைச்சேனை விசேட நிருபர்)

Tue, 09/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை