சம்மாந்துறை எஸ்.எஸ்.சி கழகம் சம்பியன்

அக்கரைப்பற்று றஹீமியா விளையாட்டுக் கழகம் தனது 13ஆவது வருட நிறைவினை முன்னிட்டு நடாத்திய கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சம்மாந்துறை எஸ்.எஸ்.சி. விளையாட்டுக் கழகம் சம்பியன் கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டது.

அக்கரைப்பற்று அதாஉல்லா விளையாட்டு மைதானத்தில் கடந்த 05ஆம் திகதி ஆரம்பான இரவு நேர இச்சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி (10)இரவு நடைபெற்றது.

68 அணிகள் கலந்து கொண்ட இச்சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில், அட்டாளைச்சேனை தைக்காநகர் எவடொப் விளையாட்டுக் கழகமும், சம்மாந்துறை எஸ்.எஸ்.சி. விளையாட்டுக் கழகமும் கழமிறங்கியது.

அணிக்கு 8 பேர் கொண்ட மட்டுப்படுத்தப்பட்ட 5 ஓவர்களைக் கொண்ட இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற எவடொப் அணியினர் முதலில் துடுப்பெடுத்த தீர்மானித்து, 5 ஓவர்களில் மூன்று விக்கெட்டுக்களை இழந்து 45 ஓட்டங்களைப் பெற்றனர்.

வெற்றி இலக்காக 46 ஓட்டங்களைப் பெறுவதற்கு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சம்மாந்துறை எஸ்.எஸ்.சி அணியினர் மிகவும் நிதானமாக துடுப்பெடுத்தாடி 4.3 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்து சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டதுடன், சம்பியனுக்கான பணப்பரிசாக 30 ஆயிரம் ரூபாவை தனதாக்கிக் கொண்டனர். இரண்டாமிடத்தைப் பெற்ற எவடொப் அணியினருக்கு ரூபா 20 ஆயிரம் வழங்கி வைக்கப்பட்டது.

இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாகவும், தொடரின் சிறப்பாட்டக்காரராகவும் எஸ்.எஸ்.சி அணியைச் சேர்ந்த துடுப்பாட்ட வீரர் எம்.சிப்றாக் தெரிவானார்.

அக்கரைப்பற்று மத்திய ,அம்பாறை சுழற்சி நிருபர்கள்

Fri, 09/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை