காட்டுத் தீயை கட்டுப்படுத்த இந்தோனேசியா தீவிர முயற்சி

இந்தோனேசியா ஆயிரத்துக்கும் அதிகமான காட்டுத் தீச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த முயற்சிகளை அதிகரித்துள்ளது. காட்டுத் தீயால் போர்னியோ, சுமத்ரா பகுதிகளில் கரும்புகை நிலவுகிறது. சுமார் 6,000 தீயணைப்பாளர்கள் பாதிக்கப்பட்ட இடங்களில் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

 செயற்கை முறையில் மழையை ஏற்படுத்துவதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மலேசியாவில், காற்றின் தரம் மோசமடைந்திருப்பதால் 500க்கும் அதிகமான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பெரும்பாலான பாடசாலைகள் சரவாக் மாநிலத்தில் உள்ளன. அங்கு காற்றின் தரம் அபாயகரமான அளவை எட்டியுள்ளது.

பயிர்ச்செய்கைக்காக நிலங்களை சுத்தப்படுத்துவதற்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் தீவைப்பு சம்பவங்களே பிராந்தியத்தில் ஆபத்தான புகைமூட்டத்திற்கு காரணமாகும்.

Thu, 09/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை