ஸ்பெயினில் 4 ஆண்டுகளில் நான்காவது முறை தேர்தல்

ஸ்பெயினில் கடந்த நான்கு ஆண்டுகளுக்குள் நான்காவது தேர்தல் நடத்தப்படவுள்ளது. அரசொன்றை அமைப்பதற்கு பாராளுமன்றத்தில் போதிய ஆதரவை திரட்ட பதில் பிரதமர் பெட்ரோ சான்சஸினால் முடியாமல்போனதை அடுத்தே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அரச தலைவரான ஆறாவது பிலிப் மன்னர் கட்சித் தலைவர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் பிரதமரை தேர்வு செய்வதில் தோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில் தேர்தல் வரும் நவம்பர் 10 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. கடைசியாக கடந்த ஏப்ரலில் தேர்தல் இடம்பெற்றது. அந்தத் தேர்தலில் சான்சஸின் சோசலிச பீ.எஸ்.ஓ.ஈ கட்சி அதிக ஆசனங்களை வென்றபோதும் 350 இடங்கள் கொண்ட பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற தவறியது. இந்நிலையில் இந்த அரசியல் இழுபறிக்கு எதிர்க்கட்சிகள் மீது சான்சஸ் குற்றம்சாட்டினார்.

Thu, 09/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை