கசோக்கி கொல்லப்பட்ட கட்டடத்தை விற்றது சவூதி

சவூதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கசோக்கி கொல்லப்பட்ட ஸ்தன்பூல் நகரில் உள்ள சவூதி துணை தூதரக கட்டடத்தை சவூதி விற்றுள்ளது.

துருக்கி நகரில் இருக்கும் அந்தக் கட்டடத்தை ஒரு மாதத்திற்கு முன் அதன் பெறுமதியில் மூன்றில் ஒரு விலைக்கு விற்றிருப்பதாக துருக்கி தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கட்டடத்தை வாங்கியவர் விபரம் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் அமெரிக்க துணைத் தூதரகம் இருக்கும் பகுதியில் சவூதி புதிய கட்டடம் ஒன்றை ஏற்கனவே வாங்கி இருப்பதாக அந்த செய்தி மேலும் கூறியுள்ளது. எனினும் இந்த விற்பனையை உறுதி செய்ய எந்த விபரமும் தமக்கு கிடைக்கவில்லை என்று துருக்கி வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

வொஷிங்கடன் போஸ்ட் பத்திரிகைக்கு கட்டுரை எழுதி வந்த கசோக்கி கடந்த ஆண்டு ஒக்டோபர் 2 ஆம் திகதி அந்த துணைத் தூதரகத்திற்கு சென்ற நிலையில் கொல்லப்பட்டு அவரது உடல் துண்டு துண்டாக வெட்டி அகற்றப்பட்டது. அவரது உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் அவை அழிக்கப்பட்டிருக்கலாம் என்று துருக்கி ஊடகங்கள் குறிப்பிட்டிருந்தன.

Thu, 09/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை