களனி விகாரை பங்களிப்பாளர் சபை தலைமை பதவியிலிருந்து பிரதமர் நீக்கம்

களனி விகாரை பங்களிப்பாளர் சபை தலைமை பதவியிலிருந்து பிரதமர் நீக்கம்-Majority to Remove PM Ranil from Kelaniya Rajamaha Viharaya Chairman of the Borad of Donors

இறுதி முடிவு செயற்குழு கூட்டத்தில்

களனி ரஜா மகா விகாரையின் பங்களிப்பாளர் சபை தலைமை பதவியிலிருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நீக்குவதற்கு பெரும்பான்மை ஆதரவு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் களனி ரஜா மகா விகாரையின் பங்களிப்பாளர் சபை கூட்டத்தில் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விகாராதிபதி சங்கைக்குரிய பேராசிரியர் கொள்ளுப்பிட்டியே மஹிந்த சங்கரக்‌கித தேரரின் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்திலேயே குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் சாவிக்ரமசிங்கவை பங்களிப்பாளர் சபைத் தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கு ஆதரவாக 100 இற்கும் அதிகமானோரின் ஆதரவு கிடைக்கப் பெற்றதாகவும், அதற்கு சுமார் 07 பேர் எதிர்ப்புத் தெரிவித்ததாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், களனி ரஜ மகா விகாரையின் பங்களிப்பாளர் சபையின் செயற்குழு கூட்டத்தின் பின்னர் இது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sun, 09/01/2019 - 20:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை