கலை, கலாசார விளையாட்டு போட்டி

மண்டூர் அருள்மணி விளையாட்டுகழகத்தின் 35வது ஆண்டு நிறைவினையொட்டி நடாத்தும் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி மற்றும் கலை,கலாச்சார விளையாட்டுப் போட்டியும் அருள்மணி விளையாட்டு மைதானத்தில் தலைவர் என்.பிரசன்னா தலைமையில் (08) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அதிதிகளை வரவேற்கும் நிகழ்வுகளுடன் ஆரம்பமானது.இந்நிகழ்வினை சிறப்பிற்கும் முகமாக பிரதம அதிதியாக பட்டிருப்பு தொகுதியின் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதம அமைப்பாளரும்,தேசிய கடதாசி கூட்டுத்தாபனத்தின் தலைவரும் பிரதேச செயலக இணை ஒருங்கிணைப்பு தலைவருமான சோ.கணேசமூர்த்தி , விசேட அதிதிகளாக போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி ,சிறப்பு அதிதிகளாக திருக்கோயில் உதவிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.திருச்செல்வம்,வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.ஏ.ஏ.என்.டயஸ்.அதிபர் எஸ்.தம்பிப்பிள்ளை,அதிபர்.வ.ஜெயந்தி, ஆன்மீக மற்றும் கௌரவ அதிதிகளாக ஆலய பூசகர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் கிரம சேவை உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

அன்றைய விளையாட்டு நிகழ்வில் கலை,கலாசாரத்தினை வெளிப்படுத்தும் விளையாட்டுகள் நடைபெற்றதோடு புலமைப்பரிசில் மற்றும் பல்கலைக்கழம் தெரிவாகிய மாணவர்களை கௌரவித்தும் கிரிக்கெட்,உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகளில் வெற்றியீட்டிய அணிகளுக்கு பெறுமதிவாய்ந்த பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

ஆலையடிவேம்பு சுழற்சி நிருபர்

Thu, 09/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை