கொட்டகலை ஸ்மோல் டிரேட்டன் அணி வெற்றி

ஹற்றன் உதைபந்தாட்ட சம்மேளத்தினால் (லீக்கினால்) ஓழுங்கு செய்யப்பட்ட ஹற்றன் - டிக்கோயா நகர சபை தலைவர் கிண்ணம் - 2019 உதைபந்தாட்ட தொடர் ஹற்றன் டன்பார் மைதானத்தில் நடைபெற்றது. ஆரம்ப போட்டியில் கொட்டகலை ஸ்மோல் டிரேட்டன் விளையாட்டு கழகமும் நோர்வூட் ஐரபி ரன் விளையாட்டு கழகமும் மோதின. இதில் கொட்டகலை ஸ்மோல் டிரேட்டன் விளையாட்டு கழகம் 5:1 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்றது.

இந்த முதல் போட்டியில் கொட்டகலை ஸ்மோல் டிரேட்டன் அணி முதல் பாதியில் இரண்டு கோல்களையும் நோர்வூட் ஐரபி ரன் அணி ஒரு கோலையும் பெற்றிருந்தது. இரண்டாம் பாதியில் கொட்டகலை ஸ்மோல் டிரேட்டன் அணி மேலும் மூன்று கோல்களை பெற்றக் கொண்டதுடன் நோர்வூட் ஐரபி ரன் விளையாட்டுக்கழகம் எந்த கோல்களையும் பெற்றுக் கொள்ளவில்லை. இதன் அடிப்படையில் ஐந்துக்கு ஒன்று என்ற கோல் அடிப்படையில் கொட்டகலை ஸ்மோல் டிரேட்டன் அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் கொட்டகலை ஸ்மோல் டிரேட்டன் அணி சார்பாக விக்டர் இரண்டு கோல்களையும் திருலோகு, சந்திரன், சிதுசன் ஆகியோர் தலா ஒரு கோலையும் பெற்றக் கொண்டனர்.

மேலும் நோர்வூட் ஐரபி ரன் விளையாட்டு கழகம் சார்பாக பதிவு செய்யப்பட்ட ஒரு கோலை சசிக்குமார் பெற்றுக் கொடுத்தார்.

(கொட்டகலை தினகரன் நிருபர்)

Thu, 09/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை