அக்கரைப்பற்று கோட்ட சிறுவர் மெய்வல்லுநர் விளையாட்டு

அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் அக்கரைப்பற்று கல்விக் கோட்டப் பாடசாலை ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கிடையிலான சிறுவர் மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி கடந்த சனிக்கிழமை (07) அக்கரைப்பற்று அஸ்- - ஸிறாஜ் மகா வித்தியாலய மைதானத்தில் சிறுவர் மெய்வல்லுநர் விளையாட்டு இணைப்பாளர் ஏ.எல்.பாயிஸ் நெறிப்படுத்தலில் அக்கரைப்பற்று கோட்டக் கல்விப்பணிப்பாளர் எம்.ஏ.கலீலுல் றஹ்மான் தலைமையில் இடம்பெற்றது.

தரம் - 3 ஆண்கள் பிரிவில் 47 புள்ளிகளைப் பெற்று அக்கரைப்பற்று சாஹிறா வித்தியாலயம் முதலாமிடத்தினையும் 45 புள்ளிகளைப்பெற்று அக்கரைப்பற்று முஹம்மதியா ஜுனியர் வித்தியாலயம் இரண்டாமிடத்தினையும் 43 புள்ளிகளைப் பெற்று அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் ஜுனியர் வித்தியாலயம் மூன்றாமிடத்தினையும் பெற்றுக் கொண்டனர்.

தரம் - 3 பெண்கள் பிரிவில் 44 புள்ளிகளைப் பெற்று அக்கரைப்பற்று சாஹிறா வித்தியாலயம் முதலாமிடத்தினையும் 41 புள்ளிகளைப்பெற்று அக்கரைப்பற்று முஹம்மதியா ஜுனியர் கல்லூரி இரண்டாமிடத்தினையும் 36 புள்ளிகளைப் பெற்று அக்கரைப்பற்று ஆயிஷா முஸ்லிம் மகளீர் கல்லூரி மூன்றாமிடத்தினையும் பெற்றுக் கொண்டனர்.

தரம் - 3 கலப்பு பிரிவில் 19 புள்ளிகளைப் பெற்று அக்கரைப்பற்று சம்சுல் உலும் வித்தியாலயம் முதலாமிடத்தினையும் 13 புள்ளிகளைப்பெற்று அக்கரைப்பற்று அல்-ஹிதாயா வித்தியாலயம் இரண்டாமிடத்தினையும் 10 புள்ளிகளைப் பெற்று அக்கரைப்பற்று ஹிஜ்றா வித்தியாலயம் மூன்றாமிடத்தினையும் பெற்றுக் கொண்டனர். தரம் - 4 ஆண்கள் பிரிவில் 46 புள்ளிகளைப் பெற்று அக்கரைப்பற்று சாஹிறா வித்தியாலயம் முதலாமிடத்தினையும் 43 புள்ளிகளைப்பெற்று அக்கரைப்பற்று ஆண்கள் வித்தியாலயம் இரண்டாமிடத்தினையும் 37 புள்ளிகளைப் பெற்று அக்கரைப்பற்று முஹம்மதியா ஜுனியர் வித்தியாலயம் மூன்றாமிடத்தினையும் பெற்றுக் கொண்டனர்.

தரம் - 4 பெண்கள் பிரிவில் 41 புள்ளிகளைப் பெற்று அக்கரைப்பற்று சாஹிறா வித்தியாலயம் முதலாமிடத்தினையும் 34 புள்ளிகளைப்பெற்று அக்கரைப்பற்று முனவ்வறா ஜுனியர் கல்லூரி இரண்டாமிடத்தினையும் 33 புள்ளிகளைப் பெற்று அக்கரைப்பற்று ஆயிஷா முஸ்லிம் மகளீர் கல்லூரி மூன்றாமிடத்தினையும் பெற்றுக் கொண்டனர்.

தரம் - 4 கலப்பு பிரிவில் 22 புள்ளிகளைப் பெற்று அக்கரைப்பற்று சேர் றாசீக் பரீட் வித்தியாலயம் முதலாமிடத்தினையும் 17 புள்ளிகளைப்பெற்று அக்கரைப்பற்று சம்சுல் உலும் வித்தியாலயம் இரண்டாமிடத்தினையும் 16 புள்ளிகளைப் பெற்று அக்கரைப்பற்று டாக்டர் பதியுதீன் முஹம்மத் வித்தியாலயம் மூன்றாமிடத்தினையும் பெற்றுக் கொண்டனர்.

தரம் -5 ஆண்கள் பிரிவில் 44 புள்ளிகளைப் பெற்று அக்கரைப்பற்று ஆண்கள் வித்தியாலயம் முதலாமிடத்தினையும் 41 புள்ளிகளைப்பெற்று அக்கரைப்பற்று முஹம்மதியா ஜுனியர் வித்தியாலயம் இரண்டாமிடத்தினையும் 40 புள்ளிகளைப் பெற்று அக்கரைப்பற்று சாஹிறா வித்தியாலயம் மூன்றாமிடத்தினையும் பெற்றுக் கொண்டனர்.

தரம் - 5 பெண்கள் பிரிவில் 45 புள்ளிகளைப் பெற்று அக்கரைப்பற்று சாஹிறா வித்தியாலயம் முதலாமிடத்தினையும் 37 புள்ளிகளைப்பெற்று அக்கரைப்பற்று அஸ்- - ஸிறாஜ் ஜுனியர் வித்தியாலயம் இரண்டாமிடத்தினையும் 36 புள்ளிகளைப் பெற்று அக்கரைப்பற்று ஜுனியர் வித்தியாலயம் மூன்றாமிடத்தினையும் பெற்றுக் கொண்டனர்.

தரம் - 5 கலப்பு பிரிவில் 24 புள்ளிகளைப் பெற்று அக்கரைப்பற்று சம்சுல் உலூம் வித்தியாலயம் முதலாமிடத்தினையும் 17 புள்ளிகளைப்பெற்று அக்கரைப்பற்று டாக்டர் பதியுதீன் முஹம்மத் வித்தியாலயம் இரண்டாமிடத்தினையும் 14 புள்ளிகளைப் பெற்று அக்கரைப்பற்று ஹிஜ்றா வித்தியாலயம் மூன்றாமிடத்தினையும் பெற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்வில் அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் ஆரம்பக் கல்விக்கான உதவிக் கல்விப்பணிப்பாளர் எஸ்.அம்ஜத்கான் பிரதம அதிதியாகவும் பாடசாலைகளின் அதிபர்கள் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பாடசாலைகளுக்கான சான்றிதழ்களை இதன் இறுதி நிகழ்வில் வழங்கி வைத்தனர். அக்கரைப்பற்று கல்விக் கோட்டத்தில் 21 பாடசாலைகள் மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் பங்கு கொண்டமை குறிப்பிடத்தக்கது.

(அக்க​ைரப்பற்று மத்திய ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்கள்)

Thu, 09/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை