அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் முன்னேற்றம்

அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4ஆவது சுற்றில் விளையாட, முதல்நிலை வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) தகுதி பெற்றார்.

மூன்றாவது சுற்றில் அமெரிக்காவின் டெனிஸ் குட்லாவுடன் மோதிய ஜோகோவிச் 6–3, 6–4, 6–2 என்ற நேர் செட்களில் வென்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு 3ஆவது சுற்றில் சுவிஸ் நட்சத்திரம் ரொஜர் பெடரர் 6–2, 6–2, 6–1 என்ற நேர் செட்களில் டேனியல் எவன்ஸை (இங்கிலாந்து) எளிதாக வீழ்த்தினார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு 3ஆவது சுற்றில் அமெரிக்க நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ் 6–3, 6–2 என்ற நேர் செட்களில் கரோலினா முச்சோவாவை (செக்.) வீழ்த்தி கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா தனது 3ஆவது சுற்றில் 6–1, 4–6, 6–4 என்ற செட் கணக்கில் ஆன்ஸ் ஜாபேருக்கு எதிராக (துனிசியா) போராடி வென்றார்.

Mon, 09/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை