அதிக எடைகொண்ட டெஸ்ட் வீரராக மே.இ. தீவுகளின் கோர்வோல் சாதனை

உலகில் அதிக எடையுள்ள டெஸ்ட் கிரிக்கெட் வீரராக மேற்கிந்தி தீவுகளின் புதிய சகலதுறை வீரர் ரகீம் கோர்ன்வோல் பதிவாகியுள்ளார்.

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் இந்தியா வென்ற நிலையில், இரண்டாவது ஆட்டம் கிங்ஸ்டனில் நடைபெற்று வருகிறது. இதில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக ரகீம் கோர்ன்வோல் களமிறக்கப்பட்டுள்ளார்.

சகலதுறை வீரரான கோர்ன்வோல் தனது முதல் ஆட்டத்திலேயே புஜாராவை ஆட்டமிழக்கச் செய்தார். புதிய வீரரான கோர்ன்வோல் 6.5 அடி உயரம் கொண்டவர். அவரது மொத்த எடை 140 கிலோ ஆகும்.

இதற்கு முன்னர் அவுஸ்திரேலிய முன்னாள் அணித்தலைவர் வார்விக் ஆம்ஸ்ட்ரோங் 133–139 கிலோ எடையுடன் ஆடினார். அவரது எடையை முறியடித்துள்ளார் ரகீம் கோர்ன்வோல்.

ஓப் ஸ்பின்னரான ரகீம், கீழ் வரிசை துடுப்பாட்ட வீரராகவும் உள்ளார்.

முதல் டெஸ்ட் ஆட்டத்தில் கார்ன்வோல் ஆடவில்லை. ஆனால் இந்தியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் ஏ அணியில் இடம் பெற்று 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

26 வயதான அண்டிகுவாவில் பிறந்த கோர்ன்வோல் கடந்த 2016 இல் இந்தியாவுக்கு எதிராக பயிற்சி ஆட்டத்தில் மோதிய மே.இ.தீவுகள் கிரிக்கெட் சபை தலைவர் அணியில் ஆடினார். உள்ளுர் போட்டிகளில் மொத்தம் 260 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார் கோர்ன்வோல்.

Mon, 09/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை