அகில இங்கை முஸ்லிம் லீக்கின் ஏற்பாட்டில் வறிய குடும்பங்களுக்கு உணவுப்பொருட்கள்

அகில இங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் அம்பாறை மாவட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் வறிய குடும்பங்களுக்கும் மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் மற்றும் உலர் உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (01) சம்மேளனத்தின் அம்பாறை மாவட்டத் தலைவர் மௌலவி யூ.எம்.நியாஸி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் முன்னாள் தலைவர் எம்.ஐ.உதுமாலெப்பை பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன், மாவட்ட செயலாளர் எம்.ஐ.எம்.சிறாஜுதீன், பொருளாளர் ஏ.எல்.ஏ.றஹீம், மாவட்ட ஆலோசகர்களான ஓய்வு பெற்ற கணக்காளர் எஸ்.எம்.கலீல், ஏ.எல்.யாசீன், ​ெடாக்டர் ஏ.எல்.அஹமட்லெப்ப, ஓய்வு பெற்ற அதிபர் ஏ.எம்.சித்தீக உட்பட பதவி வழி உத்தியோகத்தர்கள், நிருவாக உறுப்பினர்கள் கலந்து கொண்டு கற்றல் உபகரணங்கள் மற்றும் உலர் உணவுப் பொதிகளையும் வழங்கி வைத்தனர்.

இதன்போது முன்னாள் தேசியத்தலைவர் எம்.ஐ.உதுமாலெப்பை உரையாற்றுகையில்,

தமிழ் சிங்கள சமூகத்தில் காணாமல் போனோர் தொடர்பாக உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் பேசப்படுவது போன்று முஸ்லிம் சமூகத்தில் காணாமல் போனோர் தொடர்பாக பேசப்படுவதில்லை. இப்பாரட்சமான நிலை மாற வேண்டும். நீதியானது அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும்.

அம்பாறை மாவட்டத்தில் வன இலாகாவினாலும் இராணுவத்தாலும் பிடிக்கப்பட்ட காணிகள் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டு காணிச் சொந்தக்காரர்களுக்கு வழங்கப்பட வேண்டும். ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மைச் சமூகம் சிந்தித்து நமது தேவைகளை நிவர்த்தி செய்யக் கூடிய பொருத்தமான வேட்பாளரை அடையாளங் கண்டு அவருடன் ஒப்பந்தங்களை மேற்கொண்ட பின்னர்தான் வாக்களிப்பதற்கான முடிவு எடுக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

(ஒலுவில் கிழக்கு தினகரன், பாலமுனை கிழக்கு தினகரன் நிருபர்கள்)

Tue, 09/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை