பஸ்களின் மேலேறி ஆர்ப்பாட்டம்: உரிய தீர்வு தருமாறு எச்சரிக்ைக

கோரிக்ைக நிறைவேறும் வரை தொடரும் என்கின்றனர் ஊழியர்கள்

சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் நேற்று (18) மூன்றாவது நாளாக பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். கடந்த திங்கட்கிழமை முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் இப்பணிப் பகிஷ்கரிப்பு, தமது கோரிக்கைகள் நிவர்த்தி செய்யப்படும் வரை தொடரவுள்ளதாக பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வரும் போக்குவரத்துச் சபை ஊழியர்கள் தெரிவித்தனர்.

நேற்று காலை மூன்றாவது நாளாக பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்ட அக்கரைப்பற்று சாலை ஊழியர்கள் பஸ்களின் மேலேறி பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறும் அக்கரைப்பற்று பஸ் சாலையின் பிரதான நுழைவாயிலை மறித்து நின்றவாறும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீலங்கா சுதந்திர தேசிய போக்குவரத்து ஊழியர் சங்கம், அகில இலங்கை மோட்டார் ஊழியர் சங்கம் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர் சங்கம் ஆகியன இணைந்து இவ்வேலை நிறுத்தப் போராட்டத் தை ஆரம்பித்துள்ளன.இதனால் பயணிகள், பாடசாலை மாணவர்கள், வயோதிபர்கள், பெண்கள் என பலர் பலத்த சிரமங்களை எதிர்நோக்கினர்.

மேலும் மட்டக்களப்பு மாவட்ட இ.போ.ச உழியர்களும் நேற்று மூன்றாவது நாளாக பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதால் மாவட்டத்தின் தூர இடங்களுக்கான பஸ் சேவைகள் பெரிதும் பாதிப்புற்றன.சுமார் 25 இடங்களுக்கான பஸ்சேவைள் இந்தப்பணிப்பகிஷ்கரதிப்பால் ஸ்தம்பிதமடைந்து பயணிகள் மாணவர்கள் அரச அதிகாரிகள் ,தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் பாதிப்புற்றனர்.ஏறாவூர்,வாழைச்சேனை,ஓட்டமாவடி, காத்தான்குடி,மகிழூர்,புன்னைக்குடா,களுதாவளை,களுவாஞ்சிக்குடி உள்ளிட்ட பல பிரதேசங்களும் நேற்று போக்குவரத்து சேவைகளின்றி வீதிகள் வெறிச் சோடிக்கிடந்தன.

எனினும் தனியார் பஸ்சேவைகள் வழமைபோல் இடம்பெற்றன. சம்பள அதிகரிப்பு, தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக்கல் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து இவர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

(அட்டாளைச்சேனை தினகரன், வெல்லாவெளி தனிகரன் நிருபர்கள்)

Thu, 09/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை