கிழக்கு மாகாண வெடிபொருட்கள் பாதுகாப்பு: மட்டக்களப்பில் விசேட கலந்துரையாடல்

வெடிபெருட்கள் பாதுகாப்பு தொடர்பான கந்துரையாடல்

கிழக்கு,மாகாண புவிசரிதவியல் அளவீடு மற்றும் சுரங்கங்கள் பணியகத்தினால் கடந்த செவ்வாய்க் கிழமை (17) மட்டக்களப்பு ஈஸ்ட்லக்குன் விடுதியில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண பிரதம செயலாளர் அபேகுணவர்தன தலைமையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் புவிச்சரிதவியல் அளவீடு மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் தலைவர் அசேல இடவெல, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார், திருகோணமலை அரசாங்க அதிபர் என்.யு.யு புஸ்பகுமார், அம்பாரை மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் மற்றும் மூன்று மாவட்டங்களினதும் பிரதேச செயலாளர்கள், மட்டக்களப்பு பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக்க தயானந்த, திருகோணமலை பிரதிபொலிஸ்மா அதிபர் பி.ஆர்.எஸ். நர்கர்போல பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள்,மாவட்டசெயலக உத்தியோகஸ்த்தர்களும் கலந்து கொண்டனர்.

கடந்த ஏப்ரல் தாக்குதல்களுக்கு பாவிக்கப்பட்ட சில வெடிமருந்துகள் தொடர்பில் இதில் ஆராயப்பட்டது. வர்தக நோக்கில் வெடிமருந்துகளை வழங்குவதிலுள்ள புதிய சட்ட நடவடிக்கைகளைப் பற்றி இங்கு தெளிவு படுத்தப்பட்டது. அவ்வாறு வழங்கப்படும் வெடி பொருட்களுக்கான அனுமதியை வழங்கும் அதிகாரிகளின் அதிகாரங்கள் மற்றும் சட்ட திருத்தங்களில் காணப்பட்டுள்ள விடயங்கள் குறித்தும் இதில் விளக்கமளிக்கப்பட்டது.

கடல் கனியங்களைப் பாதுகாப்பது மற்றும் வெடிபொருட்கள் பாவனை தொடர்பான விளக்கங்களை பொறியலாளர் ஆ.சு.ஆ. பாரீஸ் வழங்கினார்.

வெடி மருந்துகளுக்காக வழங்கப்படும் அனுமதிப்பத்திரத்தின் அதி கூடிய காலம் ஒரு வருடமாக வரையறுக்கப்பட்டுள் ளதாகவும், மணல், கல்மலைகள் உடைத்தல் கிறவல் போன்றவற்றுக்கான அனுமதிப்பத்திரம் ஒருவருடமாக வும் மட்டுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

(கல்லடி குறூப் நிருபர்)

Thu, 09/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை