இந்தோனேசிய காட்டுத் தீயினால் மலேசிய பாடசாலைகளுக்கு பூட்டு

இந்தோனேசிய காட்டுத் தீ காரணமாக மலேசியாவில் புகைமூட்டம் மோசமடைந்து வருவதால் அங்குள்ள சுமார் 2,500 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் நாடு முழுவதும் சுமார் 1.7 மில்லியன் மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்று மலேசியக் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

சிலாங்கூர் மாநிலத்தில் அதிகமாக ஒன்பது லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவர். சிலாங்கூர், பினாங்கு, புத்ராஜெயா, கோலாலமபூர் ஆகிய பகுதிகளில் இன்றும் பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் என்று கல்வியைமச்சு கூறியது. இதற்கிடையே, செயற்கை மழையைப் பொழியவைக்கும் முயற்சிகளை மலேசியா தொடரவிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள வெளிநாட்டு நிலப்பகுதிகளில் தீ எரிந்தால் அதை அணைக்கச் செய்யும் வகையில் சட்டம் இயற்றப்படலாம் என்று மலேசிய அரசாங்கம் முன்னர் தெரிவித்திருந்தது.

சுமத்ரா, கலிமந்தான் வட்டாரங்களில் காட்டுத் தீ பற்றியெரியும் இடங்களைக் காட்டும் செய்மதி படங்களை வெளியிடப்போவதாக மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது கூறினார். கடந்த ஜனவரி முதல், இந்தோனேசியாவின் ரியாவ், ஜாம்பி மற்றும் கலிமந்தான் பகுதிகளில் மட்டும் 42 ஆயிரம் ஹெக்டேருக்கும் மேற்பட்ட வனம், வயல்கள் எரிக்கப்பட்டுள்ளதாக மலேசிய ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

Fri, 09/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை