ஆப்கான் மருத்துவமனையில் குண்டு தாக்குதல்: 20 பேர் பலி

தெற்கு ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை ஒன்றுக்கு வெளியில் வெடிகுண்டுகளை நிரப்பிய டிரக் வண்டியை வெடிக்கச் செய்து தலிபான்கள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டு மேலும் 95 பேர் காயமடைந்துள்ளனர்.

கலட் நகரில் நேற்று இடம்பெற்ற இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் மருத்துவ பணியாளர்கள் மற்றும் நோயாளர்களாவர். பெண்கள் மற்றும் சிறுவர்கள் இடிபாடுகளில் இருந்து வெளியே எடுக்கப்படுவதை கண்டதாக பார்த்தவர்கள் விபரித்துள்ளனர்.

மருத்துவமனைக்கு அடுத்த பக்கமாக இருக்கும் அரசாங்க உளவு அதகாரிகளையே தாம் இலக்கு வைத்ததாக தலிபான்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆப்கானில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையிலும் அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தை முறிந்த நிலையிலும் தலிபான்கள் தமது தாக்குதல்களை அதிகரித்துள்ளனர்.

கடந்த செவ்வாயன்று ஜனாதிபதி அஷ்ரப் கானியின் தேர்தல் பேரணி ஒன்றை இலக்கு வைத்து அந்தக் குழு நடத்திய தாக்குதலில் 48 பேர் கொல்லப்பட்டனர்.

காபுலில் தலிபான்கள் நடத்திய தாக்குதல் ஒன்றில் அமெரிக்க படை வீரர் ஒருவர் உட்பட 11 பேர் கொல்லப்பட்டதை அடுத்து அந்த அமைப்புடன் நடத்திய அமைதிப் பேச்சுவார்த்தையில் இருந்து இம்மாத ஆரம்பத்தில் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் டிரம்ப் விலகிக் கொண்டார்.

Fri, 09/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை