துனீசியாவில் ஜனாதிபதி தேர்தல்

அரபு வசந்தத்திற்கு காரணமான முன்னாள் ஜனாதிபதி பென் அலி பதவி கவிழ்க்கப்பட்ட மக்கள் எழுச்சி போராட்டத்திற்கு பின்னர் துனீசியாவில் இரண்டாவது சுயாதீன ஜனாதிபதி தேர்தல் நேற்று நடைபெற்றது.

துனீசியாவின் முதல்முறை ஜனநாயக முறையில் தேர்வான பெஜி செயிட் எசப்சி கடந்த ஜூலை மாதம் மரணமடைந்த நிலையிலேயே புதிய தேர்தல் நடத்தப்படுகிறது.

இந்தத் தேர்தலில் இரு பெண்கள் உட்பட இருபத்தி ஆறு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தலில் வெற்றிபெற வேட்பாளர் ஒருவர் பெரும்பான்மை வாக்குகளை வெல்ல வேண்டும் என்பதோடு எந்த வேட்பாளரும் பெரும்பான்மை பெறாத பட்சத்தில் அதிக வாக்குகள் பெற்ற இரண்டு வேட்பாளர்களுக்கு இடையே இரண்டாவது சுற்று தேர்தல் நடத்தப்படும்.

கடந்த ஜூன் தொடக்கம் மக்கள் கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அரசியல் மாற்றங்கள் பற்றி மக்கள் தெளிவொன்றை பெறாத சூழலில் பெரும்பாலான வாக்காளர்கள் கடைசி நேரம் வரை முடிவொன்றை எடுக்காமல் இருந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின்றன.

Mon, 09/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை