ஹொங்கொங் ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரிட்டன் தூதரகம் முன்னால் பேரணி

ஹொங்கொங்கின் சுதந்திர உடன்படிக்கையை சீனா கடைப்பிடிப்பதற்கு அழுத்தம் கொடுக்கும்படி பிரிட்டனை வலியுறுத்தி பிரிட்டன் துணைத் தூதரகத்திற்கு முன்னால் ஹோங்கொங் ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று பேரணி நடத்தினர்.

பிரிட்டனின் காலனியாக இருந்த ஹொங்கொங் 1997 ஆம் ஆண்டில் சீனாவுக்கு ஒப்படைக்கப்பட்டது. ஹொங்கொங் மக்களுக்கென சில தனித்தன்மையான உரிமைகளை உறுதி செய்யும் ‘ஒரு நாடு, இரண்டு அமைப்புகள்’ என்ற முறையைச் செயல்படுத்தும் சீன மற்றும் பிரிட்டிஷ் ஒன்றிணைந்த அறிவிப்பு ஒப்பந்ததை 1984ஆம் ஆண்டில் பிரிட்டனும் சீனாவும் கையெழுத்திட்டன.

ஆனால் அந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் கட்டிக்காக்கப்படவில்லை என்று இப்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஹொங்கொங் மக்களின் உரிமைகள் பறிபோவதற்கு பிரிட்டன் பொறுப்பேற்கவேண்டும் என்றும் அந்நாடு இது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் கோரி வருகின்றனர்.

குற்றவாளிகளை சீனாவுக்கு நாடுகடத்தும் சட்டம் இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்திற்கு எதிராகக் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாயின. இப்போது அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்களது ஜனநாயக உரிமைகளுக்காகப் பொதுவான ஆர்ப்பாட்டமாக இதனை மாற்றியுள்ளனர்.

Mon, 09/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை