கல்வியற் கல்லூரிகளில் பயின்றோருக்கு நியமனம் வழங்க துரித நடவடிக்கை

ஊவா மாகாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு

கல்வியற் கல்லூரியில் பயிற்சிப் பெற்று வெளிமாகாணங்களில் பணிபுரியும் ஆசிரியர்களை ஊவா மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடத்துக்கு நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.  

 இதுதொடர்பில் கல்வி அமைச்சர் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.  

 ஊவா மாகாணத்தை நிரந்தர வதிவிடமாக கொண்டு கல்வியற் கல்லூரியில் பயிற்சிப் பெற்ற 66ஆசிரியர்களில் 13ஆசிரியர்கள் மாத்திரமே ஊவாமாகாண தமிழ் பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். ஏனைய 53ஆசிரியர்கள் வெளிமாகாணங்களை சேர்ந்த பாடசாலைகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.  

ஊவா மாகாணத்தில் தமிழ் கல்விப் பிரிவினால் நிர்வகிக்கப்படும் பெருந்தோட்ட தமிழ் பாடசாலைகளில் 365ஆசிரியர் வெற்றிடங்கள் தற்போது காணப்படுகின்ற போதும் பயிற்சிப் பெற்ற ஆசிரியர்களை வெளிமாகாணத்திற்கு நியமிப்பது மாணவர்களுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதியாக கருதப்படுகின்றது என ஊவா அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.  

 இது குறித்து தொடர்ந்து கடந்த பத்துநாட்களாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், ஊவா மாகாண ஆளுநர் மைத்திரி குணரட்ன, தமிழ் கல்வி அமைச்சின் செயலாளர், கல்வி செயலாளர்ரனசிங்க ஆகியோருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டேன். அதற்கமைய வெளிமாகாணங்களுக்கு நியமிக்கப்பட்ட 53ஆசிரியர்களை ஊவாமாகாணத்திற்கு நியமிக்க தேவையான மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுவோம் என உறுதிமொழி அளித்துள்ளார்கள்.  

ஆசிரியர்களுக்கு கூடிய விரை வில் நல்லதொரு தீர்வு கிடைக்கும் என முழுமையாக நம்புகின்றேன் எனவும் அவர் தெரிவித்தார்.  

Sat, 09/14/2019 - 09:52


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை