ஆலையடிவேம்பு யங்ஸ்டார் சம்பியன்

கோளாவில் லயன்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்திய மகாதேவன் கிலோச் ஞாபகார்த்த கிண்ணக் கிரிக்கட் சுற்றுப்போட்டியில் ஆளையடிவேம்பு யங்ஸ்டார் கழக அணியினர் வெற்றிபெற்று சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டன.

கோளாவில் லயன்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்திய அணிக்கு 8பேர் 5ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட திலோச் ஞாபகார்த்த கிண்ண மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி அண்மையில் ஆலையடிவேம்பு தர்மசங்கரி இடம்பெற்றது.

இறுதிப் போட்டியில் ஆலையடிவேம்பு யங்ஸ்டார் மற்றும் உதயம் ஆகிய அணிகள் மோதிக்கொண்டன. இதன்போது முதலில் துடுப்பெடுத்தாடிய யங்ஸ்டார் கழக அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 5 ஓவர்கள் நிறைவில் 3விக்கட்டுக்களை இழந்து 60ஓட்டங்களைப் பெற்றனர். யங்ஸ்டார் அணியின் சுஜிந்தன் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 44ஓட்டங்களை தனது அணிக்காக பெற்றுக்கொடுத்தார்.

61 ஓட்டங்களை வெற்றி இலக்காக் கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய உதயம் கழக அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 5 ஓவர்கள் நிறைவில் 5விக்கட்டுக்களை இழந்து 46 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர். இதற்கினங்க இறுதிப்போட்டியில் 14 ஓட்டங்களினால் யங்ஸ்டார் அணியினர் வெற்றிபெற்றனர்.

இறுதிப் போட்டியின் சிறப்பாட்டக்காரராக யங்ஸ்டார் அணியின் சுஜிந்தன் தெரிவானார். சுற்றுப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக யங்ஸ்டார் அணியின் சுஜிதரன் தெரிவானார். இக்கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் உள்ள 10 முன்னணி கழகங்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பாலமுனை விசேட நிருபர்

Thu, 09/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை