அஷ்ரப் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணம்: நிந்தவூர் லகான் அணி வசமானது

நிந்தவூர் ஹிக்மா விளையாட்டுக் கழகம் நடாத்திய அணிக்கு 08 பேர் கொண்ட 06 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட அஷ்ரப் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ண மென் பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி கடந்த (15) ஞாயிற்றுக்கிழமை நிந்தவூர் மினா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

நிந்தவூர் லகான் மற்றும் ஹிக்மா ஆகிய அணிகள் மோதிய இறுதிப் போட்டியில் லகான் அணி 04 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற லகான் அணி களத்தடுப்பு செய்ய முதலில் துடுப்பெடுத்தாடிய ஹிக்மா அணி 5.2 ஓவர்கள் நிறைவடைவில் சகல விக்கெட்டுக்களை இழந்து 53 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய லகான் அணி 5.4 பந்து வீச்சு ஓவர்கள் முடிவில் 54 ஓட்டங்களுக்கு 03 விக்கட்டுக்களைப் பெற்றது. கடைசி பந்து வரை மிகவும் விறு விறுப்பாக இடம்பெற்ற இந்த இறுதி போட்டியில் லகான் அணி சார்பாக அதன் தலைவர் அதிரடியாக ஆடி 12 பந்துகளில் 30 ஓட்டங்களை பெற்று தனது அணியின் வெற்றிக்கு பெரிதும் பங்காற்றினார்.

இப்போட்டியில் 04 விக்கட்டுக்களால் நிந்தவூர் லகான் அணி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டதோடு அவ்வணிக்கு 10,000 ரூபா பணப் பரிசும், வெற்றிக் கிண்ணமும் இரண்டாவதாகத் தெரிவு செய்யப்பட்ட அணிக்கு 5,000 ரூபா பணப்பரிசும், கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டது.

இப்போட்டியின் ஆட்ட நாயகன் விருதினை லகான் அணியின் தலைவர் சபீக் பெற்றதோடு இச்சுற்றுப் போட்டியின் தொடர் ஆட்ட நாயகன் விருதை நிந்தவூர் ஹிக்மா அணியின் இஸ்மாயில் பெற்றுக் கொண்டார்.

ஹிக்மா அணியின் தலைவர் ஐ.எல்.எம். ஜாபிர் தலைமையில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் பிரதம அதிதியாக நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர், சபை உறுப்பினர்களான ஏ. அஸ்பர், எம்.எல்.ஏ மஜீட், அம்பாறை மாவட்ட கபடி பயிற்றுவிப்பாளர் ஏ.எல்.அனஸ் அஹமட், நிந்தவூர் அனைத்து விளையாட்டுக்கு கழக சம்மேளனத்தின் செயலாளரும், ஆசிரியருமான ஏ.எம். அன்சார், ஜும்மா பள்ளிவாசலின் பொருளாளர் ஏ.எல். அன்வர்டீன் உள்ளிட்ட கழகங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

(நிந்தவூர் குறூப் நிருபர்)

Thu, 09/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை