திருமலை கலைமகள் வித்தியாலயத்திலிருந்து 5 மாணவர்கள் தேசிய மட்டத்திற்கு தெரிவு

விஷேட தேவையுடைய மாணவர்களுக்காக மாகாண மட்டத்தில் நடந்த விளையாட்டுப் போட்டியில் தெரிவான திருகோணமலை கலைமகள் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் தேசிய மட்டத்திற்குச் செல்ல தெரிவாகியுள்ளதாக கோட்டக்கல்வி அதிகாரி கோ.செல்வநாயகம் தெரிவித்தார்.

இவ் வித்தியாலய அதிபர் நா.காளிராசா தலைமையில் கடந்த (10) காலை வெற்றிபெற்று சாதனைபடைத்த மாணவர்கள் வித்தியாலயத்தில் வைத்து சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இங்கு கோட்டக்கல்வி அதிகாரி மாணவர்களை வாழ்த்தி கௌரவித்தார்.

இப்பாடசாலையில் உள்ள விஷேட கல்விப் பிரிவில் 26 மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படுகின்றது.

அவர்களில் இருந்து கடந்த 5ம்திகதி கிழக்கு மாகாண மட்டத்தில் மட்டக்களப்பில் நடந்த விளையாட்டுப்போட்டிகளில் கலைமகள் பாடசாலையில்இருந்து ஆறு மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன் இவர்களில் இருந்து முதலாம்,இரண்டாம் இடங்களைப்பெற்ற ஐந்துமாணவர்கள் தேசியமட்டத்திற்கு செல்லவுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

இப் பாராட்டு நிகழ்வில் திருகோணமலை வலயக் கல்விப் பிரிவின் முறைசாரப்பிரிவு உதவிக்கல்விப்பணிப்பாளர் ஆர்.கே.பிரபாகரன், விஷேடதேவைக்குரிய கல்விப்பிரிவின் ஆசிரிய ஆலோசகர் கே.அகிலன், இளைஞர் அபிவிருத்திஅகம் நிறுவன மதியுரைஞர் பொ.சற்சிவானந்தம் உட்பட கோட்டக்கல்விஅதிகாரி கோ.செல்வநாயகம்,அசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களைப் பாராட்டி கௌரவித்தனர். திருகோணமலை வலயத்தில் இருந்து 10 மாணவர்கள் கடந்த மாகாண மட்டப் போட்டியில் தெரிவானதாகவும் இப்போட்டிக்கு 50 மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் உதவிக்கல்விப்பணிப்பாளர் ஆர்.கே.பிரபாகரன் தெரிவித்தார்.

தேசியமட்டத்திற்குத் தெரிவான கலைமகள் வித்தியாலய மாணவர்கள் விபரம் வருமாறு

1)அஸ்வின்

2)சா.சஞ்சயன்

3) க.சுஜீபன்,

4)அ.கிஷாந்

5)சா.சஞ்சுதன்

 

திருமலை மாவட்ட விசேட நிருபர்

Sat, 09/14/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக