எயார்டெல் பாஸ்டஸ்ட் புதிய தலைமுறைக்கான வேகப்பந்து வீச்சாளர்கள் அறிமுகம்

இலங்கை முழுவதும் மிகபாரிய அளவில் செயற்படுத்தப்பட்ட'எயார்டெல் பாஸ்டஸ்ட்' அவ்வாறு இல்லாவிடின் இலங்கையின் எதிர்கால வேகப்பந்து வீச்சாளர்களை தேடிச் செல்லும் செயற்பாட்டின் இறுதிகட்டத்தை நிறைவு செய்து சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் 14 பேரை அறிவிக்கும் நிகழ்வு கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வில் இடம்பெற்றது.

'எயார்டெல் பாஸ்டஸ்ட்' தொடர்பாக கருத்து தெரிவித்த எயார்டெல் லங்கா முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஜினேஷ் ஹெஜ் 'கொழும்புக்கு வெளியில் உள்ள இளவயதினரின் திறமைகளை வெளிக்காட்ட வழியோ அல்லது உதவியோ அவர்களுக்கு இல்லை என்பதை எயார்டெல் பாஸ்டஸ்ட் செயற்திட்டத்தை ஆரம்பிக்கும் போது நாம் தெளிவாக கண்டோம். அங்கிருந்து நாம் மிக கவனமாக இந்த இளம் வீரர்களது திறமைகளை மேம்படுத்துவதற்கான பின்னணியை ஏற்படுத்தினோம். அவர்களது திறமை தொடர்பாக நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும்,போட்டி மனநிலை மற்றும் ஆற்றல்களை தொடர்ச்சியாக பேணுவதற்கும்,கிரிக்கெட் வீரர்களிடம் பயிலுவதற்கும் சந்தர்ப்பத்தை வழங்கினோம். இந்த இளம் வீரர்களிடம் நாம் அதிகவிடயங்களை எதிர்பார்க்கின்றோம். அவர்களது பெயர்களை நன்றாக ஞாபகத்தில் வைத்திருங்கள். அதுபோல எயார்டெல் பாஸ்டஸ்ட் இறுதிவரை எம்முடன் இணைந்திருங்கள்'என கூறினார்.

எயார்டெல் பாஸ்டஸ்ட் இறுதிச்சுற்றுக்கு தெரிவான 14 பேரும் 3 பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். மகளிர் திறந்தபிரிவில் விஷ்மி தெவ்மினி,மல்ஷா மதுஷானி,நெத்மா ஹெட்டியாரச்சி, ஷயனிசேனாரத்ன ஆகிய வீராங்கனைகளும், 19 வயதுக்குட்பட்ட ஆடவர் பிரிவின் கீழ் மலீஷ துரான், எஷான் மாலிங்க,மொஹமட் அகில், ஜனித் மதுஷங்க,சிரன் தீக்ஷன ஆகிய வீரர்களும், 19 வயதுக்கு மேற்பட்ட ஆடவர் பிரிவில் அருண் பிரகாஷ்,மொஹமட் பாஹிம்,ரசாஞ்சன அரவிந்து,சந்துல சுதம்பதி,மலிந்து ஷெஹான் ஆகிய வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையின் 11 மாவட்டங்களை உள்ளடக்கி 2019 பெப்ரவரி மாதம் ஆரம்பமான' எயார்டெல் பாஸ்டஸ்ட்'செயற்திட்டம் அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்கள் குழாமை கொண்டுள்ளதுடன் தேசிய குழாமில் இடம்பெறுவதற்கு தகுதியான திறமை வாய்ந்த இளைஞர்,யுவதிகளை தேர்ந்தெடுப்பதே இதன் பிரதானநோக்கமாகும்.

நியூசிலாந்துக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரில் உலக சாதனை படைத்த எயார்டெல் பாஸ்டஸ்ட் இன் வர்த்தக நாம தூதுவர் லசித் மாலிங்க கருத்து தெரிவிக்கையில் ' இந்த இளைஞர்களின் அனுபவம் மற்றும் எனது அனுபவம் ஆகியவற்றில் அநேக ஒற்றுமைகள் உள்ளன. அதிர்ஷ்டவசமாக நான் தேசிய அணியில் இடம்பெற்றேன். திறமையான பலரை நாம் காண்கின்றோம். அவர்களுக்கு திறமை இருந்தும் தேசிய அணியில் இடம் கிடைப்பதில்லை. உரியவழிகாட்டல் மற்றும் பயிற்சி ஊடாக அவர்கள் அனைவருக்கும் தேசிய அணியில் விளையாட சந்தர்ப்பம் கிடைக்கும் என நம்புகின்றேன்'என கூறினார்.

போட்டியின் ஆரம்பசுற்றில் 145 வேகப்பந்து வீச்சாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் இரண்டாம் சுற்றுக்காக எயார்டெல் சுப்பர் நட்சத்திர பயிற்சி குழுவின் வழிகாட்டல் மற்றும் மேற்பார்வையின் கீழ் மேலும் 45 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த பயிற்சியாளர் குழாமில் இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வேகப்பந்து பயிற்றுநர் அனுஷ சமரநாயக்க, இலங்கை இருபதுக்கு 20 அணித் தலைவர் மற்றும் சாதனை வீரர் லசித் மாலிங்க, இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் உலகக்கிண்ணவெற்றிஅணியில் இடம்பெற்ற சமிந்தவாஸ், ஹசான் திலகரட்ன மற்றும் உப்புல் சந்தன ஆகிய முன்னாள் வீரர்களும் இடம்பெற்றிருந்தனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துபயிற்றுனர் அனுஷ சமரநாயக்க கருத்து தெரிவிக்கையில் 'சிறந்த வேகப்பந்துவீச்சளார் ஒருவருக்கு பயிற்சி, உடற்தகுதி, தொழில்நுட்பம் மற்றும் சிறந்த மனநிலை ஆகியவை இருத்தல் வேண்டும். இந்த இளம் வேகம் பந்துவீச்சாளர்களுடன் நான் ஆரம்பம் முதலே பணியாற்றினேன். அவர்களது திறமைகள் என்னை ஆச்சரியப்படவைத்தன. அந்த 14 பேரும் இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பெற்று சிறந்த திறமைகளை வெளிப்படுத்துவார்கள் என நம்புகின்றேன்'என கூறினார்.

 

Sat, 09/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை