டெஸ்ட் தலைவர் பதவி குறித்து ஷகிப் அல்-ஹசன் எங்களுடன் ஏதும் பேசவில்லை - பிசிபி

சகலதுறை வீரர் ஷகிப் அல்--ஹசன் டெஸ்ட் தலைவர் பதவி குறித்து தங்களிடம் ஏதும் பேசவில்லை என்று பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

பங்களாதேஷ் அணியின் சிறந்த சகலதுறை வீரரான ஷகிப் அல் ஹசன். அண்மையில் ‘‘மனதளவில் டெஸ்ட் தலைவர் பதவிக்கு நான் தயாராகவில்லை. ஆனால், அணி சிறந்த வடிவமைப்பை பெற வேண்டும் என்பதை புரிந்து கொண்டுள்ளேன். தலைவராக இருந்து சிறப்பாக விளையாடினால், அது சிறந்ததாக இருக்கும்’’ என கூறியிருந்தார்.

ஆனால், ஷகிப் அல் - -ஹசன் எங்களிடம் அது குறித்து பேசவில்லை என்று பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தலைவர் நஸ்முல் ஹசன் தெரிவித்துள்ளார்.

நஸ்முல் ஹசன் இதுகுறித்து கூறுகையில் ‘‘ எனது வீட்டில் ஷகிப் அல்- ஹசன் உட்பட சில சிரேஷ்ட வீரர்களை சந்தித்து பேசினேன். அப்போது கூட தலைவர் பதவி குறித்து ஷகிப் அல் -ஹசன் என்னிடம் ஏதும் கூறவில்லை. எனினும், டெஸ்ட் போட்டியில் விளை யாட அவர் தயக்கம் காட்டுகிறார்.

கடந்த சில வருடங்களாகவே எங்கள் அணி வெளிநாட்டு மண்ணில் விளையாடுவதற்காக செல்லும்போது, ஷகிப் அல்- ஹசன் அடிக்கடி ஓய்வு கேட்பார். இதை நாங்கள் பார்த்திருக்கிறோம். ஆகவே, டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவருக்கு ஆர்வம் குறைவாகவே உள்ளது. ஆனால் தனிப்பட்ட முறையில் டெஸ்ட் போட்டியில் அவரது விருப்பமின்மை பற்றி நாங்கள் ஏதும் கேட்டது கிடையாது’’ என்றார்.

Sat, 09/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை