ஆப்கான் இராணுவ நடவடிக்கையில் திருமணத்தில் பங்கேற்ற 35 பேர் பலி

போராட்டக் குழுவின் மறைவிடம் ஒன்றை இலக்கு வைத்து ஆப்கானிஸ்தான் அரச படை மேற்கொண்ட சுற்றிவளைப்பு தாக்குதல் ஒன்றில் திருமண வைபவத்தில் பங்கேற்ற 35 பொதுமக்கள் கொல்லப்பட்டு மேலும் 15 பேர் காயமடைந்ததாக தெற்கு ஹெல்மாண்ட் மாகாண அதிகாரிகள் இருவர் குறிப்பிட்டுள்ளனர்.

தலிபான் தற்கொலைதாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்ட கட்டடம் ஒன்றே இந்த தாக்குதலின்போது இலக்கு வைக்கப்பட்டபோதும் அதற்கு அருகில் திருமண நிகழ்வு ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

மூசா காலா மாவட்டதின் கக்சார் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாக ஹல்மாண்ட் மாகாண சபை உறுப்பினர் அத்தவுல்லா அப்கான் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தளத்தை தலிபான்கள் மாத்திரமன்றி கடும்போக்கு இஸ்லாமியவாதக் குழுவில் செயற்படும் வெளிநாட்டினர்களும் பயன்படுத்துவதாக ஆப்கான் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

“இந்த கூட்டு இராணுவ நடவடிக்கையில் 22 தலிபான் உறுப்பினர்கள் கொல்லப்பட்டு மேலும் 14 பேர் கைது செய்யப்பட்டனர்” என்று பாதுகாப்பு அமைச்சி வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து பாகிஸ்தானியர் மற்றும் ஒரு பங்களாதேஷ் நாட்டவர் இருப்பதாகவும் அது கூறியுள்ளது.

பொதுமக்கள் கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்படுவதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த ஜனவரி தொடக்கம் மார்ச் வரையான காலப்பகுதியில் அரச ஆதரவு இராணுவ நடவடிக்கைகளில் குறைந்தது 305 பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதோடு இது இந்தக் காலப்பகுதியில் கொல்லப்பட்டவர்களின் 52.5 வீதம் என்று ஐ.நா குறிப்பிட்டுள்ளது.

Tue, 09/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை