பருவநிலை மாற்றம் குறித்து ஐ.நா எச்சரிக்கை அறிக்கை

கடந்த ஐந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டே மிக வெப்பமான ஆண்டாகப் பதிவாகியுள்ளது.

பருவநிலை மாற்றத்தைக் கையாள்வதில் உலகம் பின்தங்கியிருப்பதைக் காட்டும் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஐ.நா பருவநிலை மாநாடு பெரியளவில் நேற்று ஆரம்பமானது. மாநாட்டின் அறிவியல் ஆலோசனைக் குழு இந்த அறிக்கையை வெளியிட்டது.

நாடுகள் அவற்றின் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் இலக்குகளை அதிகரிக்க வேண்டும் என்று ஐ.நா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

1850ஆம் ஆண்டிலிருந்து உலக வெப்பநிலை குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் கடந்த நான்காண்டுக்கான சராசரி உலக வெப்பநிலையே மிக அதிகமாய் இருந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.

திட்டமிட்டதற்கு மாறாகக் கரியமில வாயு வெளியேற்றம் கடந்த ஆண்டு இரண்டு வீதம் அதிகரித்து இதுவரை இல்லாத அளவுக்கு 37 பில்லியன் தொன்னாக பதிவாகியது.

அது குறைவதற்கான அறிகுறிகள் இன்னமும் தென்படவில்லை என்ற அக்கறைகளும் நிலைவுகின்றன.

Tue, 09/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை