தென் மாகாண பிரதேச செயலகங்களுக்கு ரூ.10 இலட்சம் வீதம் வழங்க ஆளுநர் பணிப்பு

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட

தென் மாகாணத்தில் மோசமான காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் தலா பத்துலட்சம் ரூபாவை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தென் மாகாண ஆளுநர் ஹேமால் குணசேகர, தென் மாகாண பொதுச் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

எதிர்வரும் நாட்களில் இப்பணம் தென் மாகாண பொதுச் செயலாளரால் மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது.இந்நிதி பின்னர் மாவட்ட செயலாளர்களால் பாதிப்புக்குள்ளான பிரதேச செயலாளர் காரியாலயங்களுக்கு உடனடியாக விடுவிக்கப்படவுள்ளது. 24.09.2019 ம் திகதி வரை அதிகளவு பாதிப்புக்குள்ளான பகுதிகளாக காலி மாவட்டத்தின் கடவத சதர, இமதுவ, எல்பிட்டிய, அக்மீமன, யக்கலமுல்ல, நாகொட, போபே- பொத்தல, ஹபராதுவ, பத்தேகம, பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகள் அடையாளம் காணப் பட்டுள்ளதாக காலி மாவட்ட செயலாளர் சோமரத்ன விதானபதிரன கூறினார். சீரற்ற காலநிலையால் காலி மாவட்டத்தில் ஒருவர் மரணமடைந்து,மேலும் 06 பேர் காயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 12 வீடுகள் முற்றாக அழிந்துள்ளதுடன், காலி மாவட்டத்தில் 11 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 2443 குடும்பங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

மாத்தளை மாவட்டத்தில் கிரிந்த புகுள்வெல்ல, திக்வெல்ல, திஹகொட, வெலிபிட்டிய, தெவிநுவர, வெலிகம, ஹக்மன, மாத்தறை, அதுரலிய, கம்புறுபிட்டிய, மாலிம்பட, பிடபந்தர, பஸ்கொட, கொடபொல, அகுரஸ்ஸ, முலடியான பிரதேச செயலாளர் பிரிவும் மோசமான காலநிலையால் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக மாத்தறை மாவட்ட செயலாளர் பிரதீப் ரத்நாயக்க கூறினார்.

இதேவேளை மாத்தறை மாவட்டத்தில் 596 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளதாக ஆளுநர் அலுவலகம் தெரிவித்தது.

தொடர்ச்சியான மழையினால் தென்பகுதி கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Thu, 09/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை